26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

நெடுங்கேணியில் திருமணம் செய்ய வற்புறுத்தி பெண்ணை சுட்டுக்கொன்றவர் கைது: நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா, நெடுங்கேணியில் திருமணம் செய்யுமாறு மிரட்டி, இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் இன்று நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் கடந்த புதன்கிழமை மோட்டர் சைக்கிளில் சென்ற பெண் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 31 வயதான சத்தியகலா என்ற பெண் மரணமடைந்தார்.

பெண்ணின் மைத்துனரான சிவகுமார் என்பவரே, இடியன் துப்பாக்கியால் சுட்டார்.

தன்னை திருமணம் செய்யுமாறு அவர் வற்புறுத்தி வந்த போதும், சத்திகலா அதற்கு உடன்படவில்லை. இது தொடர்பில் அவர் நெடுங்கேணி பொலிசாரிடமும் முறையிட்டிருந்தார்.

இந்த நிலையில், சத்தியகலாவை சுட்டுக் கொன்றிருந்தார். கொலையை செய்ததும் அங்கிருந்து தப்பி, தலைமறைவாகி விட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெடுங்கேணி பொலிசார், அப் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் மறைந்திருந்த சிவகுமாரை இன்று கைது செய்தனர்.

பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது அவர் நஞ்சு அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக நோயாளர் காவு மூலம் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சிவகுமார் தோட்டத்தில் மறைந்து இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரு பேருந்துகள் மோதி விபத்து: 35 பேர் காயம்!

Pagetamil

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

Leave a Comment