அரசாங்கத்தை தக்கவைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திருத்தத்திற்கு வாக்களிக்கும் போது மட்டுமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்றார்.
நீதித்துறையில் அரசாங்கம் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும் அமைச்சர் ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போதைய அரசாங்கமும் அவ்வாறே செய்தால், இரண்டு அரசாங்கங்களும் வித்தியாசமாக இருக்காது என்றும் கூறினார்.
நீதித்துறையில் தலையிடப்போவதில்லை என ஜனாதிபதியும் தெளிவாக கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




