சிறையில் திருடிய கைவிலங்கு: காரில் கைவிலங்கிட்டு கடத்திய திருடன் கைது!

Date:

அண்மையில் பம்பலப்பிட்டி, லோரன்ஸ் மாவத்தையில் வாகனத் தரிப்பிடத்தில் நபர் ஒருவரை கைவிலங்கிட்டு, அவரது நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சந்தேகநபர் கிருலப்பனை பூர்வாராம பகுதியில் 5900 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 மில்லியன் ரூபா பெறுமதியான காரி, 360,000 ரூபா பெறுமதியான நகை, 30,000 ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டதாக இம்மாதம் 9ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு வந்த தம்பதியினரே குறிவைக்கப்பட்டனர். மனைவியை மண்டபத்தில் இறக்கி விட்டு, காரை நிறுத்த தரிப்பிடத்திற்கு சென்றவரை, வழிமறித்த சந்தேகநபர், தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி, கைவிலங்கிட்டு கடத்திச் சென்றார்.

அவரிடமிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்ட பின்னர், மனைவியை மண்டபத்திற்கு வெளியே அழைக்குமாறு மிரட்டினார். எனினும், கடத்தப்பட்டவர் சாமர்த்தியமாக செயற்பட்டு, மனைவிக்கு தமிழில் தகவல் தெரிவித்தார்.

மனைவி பம்பலப்பிட்டி பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

கார் உரிமையாளருடன் திருமண மண்டபத்திற்கு வந்த திருடன்,  பொலிசாரை அவதானித்து, கார் உரிமையாளரை கைவிலங்கிட்ட நிலையிலேயே இறக்கி விட்டு தப்பியோடி விட்டார்.

பின்னர் பம்பலப்பிட்டி பகுதியில் காரை விட்டுச் சென்றார். அவர் வந்த மோட்டார் சைக்கிள், கார் திருடப்பட்ட மண்டப வாகன தரிப்பிடத்திலிருந்து மீட்கப்பட்டது.

அந்த மோட்டார் சைக்கிளும் கொழும்பு கெசல்வத்தையில் இருந்து திருடப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 343 வயதுடையவர். முச்சக்கர வண்டி சாரதியாக இவர் கைதானபோது, தனது மலக்குடலில் 59000 மில்லிகிராம் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தார்.

போதைப்பொருள் குற்றத்திற்காக கைதாகி விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர் அவர். சிறைச்சாலையில் இருந்த போது கைவிலங்கை திருடி மறைத்து வைத்திருந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யுவதிக்கு பாலியல் தொந்தரவு – இராணுவ கப்டன் கைது

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன்...

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை சம்மாந்துறை...

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்