மருதமுனையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரையொதுங்கியது!

Date:

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ் பிரிவில் இன்று (8) காலை குறித்த சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை பகுதிக்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக நாடு பூராகவும் உள்ள கடற்கரைப்பகுதிகளில் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் கரையொதிங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

-பா.டிலான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்