இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீனிற்கு வரவேற்பு!

Date:

இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிக துணைத் தூதுவர், தமிழர் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிம், எம்.எஸ்.தெளபீக், அல்ஹாபிழ் நஸீர் அஹமட், இம்தியாஸ் பாக்கிர் மாக்கர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் மாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிக துணைத் தூதுவர் போன்றோர்கள் இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரினால் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சொந்த மகளை சீரழித்த தந்தைக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட காலக் கடூழிய...

செப்.1 முதல் புதிய படங்கள் வெளியாகாது: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்