கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே (83) நேற்று (07) காலமானார்.
அவருக்கு, அனுதாபம் தெரிவித்து வடமேல் மாகாணத்தில் பல இடங்களிலும் அஞ்சலி பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.
வாரியபொல பிரதேச சபையினால் வைக்கப்பட்ட பதாதையில் புகைப்படம் தவறுதலாக அச்சிடப்பட்டதால் சர்ச்சை தோன்றியது.
அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து பதாகை வைத்திருந்தனர்.
இந்த பதாகையில், வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸமில்லின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பதாகையில் பெயர் சரியாகவே எழுதப்பட்டுள்ளது.
வாரியபொல நகரின் பல இடங்களிலும் வைக்கப்பட்ட இந்த பாதாதைகள் பின்னர் அகற்றப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1