நவகமுவ பிரதேசத்தில் கணவனை வெட்டிக் கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கணவன் தனது மனைவியைத் திருகுவளையால் தாக்க முற்பட்டதாகவும், மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மொரகெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




