29.3 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

பிரியந்தவின் குடும்பத்திற்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் இழப்பீடு; மாதாந்த சம்பளமும் வரும்: காப்பாற்ற முயன்றவரை நேரில் பாராட்டிய இம்ரான்!

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்தகுமாரவின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். அத்துடன், அவரது மாதாந்த சம்பளம் தொடர்ந்து வழங்கப்படும் என அவர் பணியாற்றிய ஆடை நிறுவனம் தனக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

‘இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது; என்றும் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக கூறினார்.

கடந்த வாரம் சியல்கோட்டில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜை பிரியந்த குமாரவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு, இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்

இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர். பிரியந்த குமாரவின் திருவுருவப் படத்துக்கு பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அடிப்படைவாதிகளிமிருந்து பிரியந்தகுமாரவை காப்பாற்ற முயன்ற சக ஊழியரான மாலிக் அட்னானுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பிரதமர் இம்ரான் இந்த துணிச்சலான முயற்சியை பாராட்டினர். அட்னானின் “தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலை” பாராட்டி, தம்கா-இ-ஷுஜாத் விருது வழங்கப்படும் என்று ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமையும் அவர் அறிவித்திருந்தார்.

திருக்குர்ஆன் ஓதுதலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அனைத்து மதத்தினரிடையே மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் சிறு ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், அட்னானின் துணிச்சலைப் பாராட்டினார். ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து மற்றொருவரைக் காப்பாற்ற முயற்சிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

“நாட்டில் முன்மாதிரிகள் முக்கியம், ஏனென்றால் மக்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்,” என்று அவர் கூறினார், “உடல் சக்தியை விட தார்மீக சக்தி பெரியது” என்று கூறினார்.

“அந்த மிருகங்களுக்கு எதிராக மாலிக் அட்னான் நின்ற விதத்தை நமது இளைஞர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மதத்தின் பெயரால் மக்கள் பிறரைக் கொல்கிறார்கள் என்றும் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். “நபி (ஸல்) அவர்கள் அமைதியைப் போதித்தார்கள். அவர் எங்களுக்கு அமைதியையும் நீதியையும் கற்பித்தார்,” என்று அவர் கூறினார். மனிதாபிமானமுள்ள சமுதாயத்தில் நீதி கிடைக்கும், ஆனால் விலங்குகள் உள்ள சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை, என்றார்.

“ஒருவர் ஒருவரை நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டினால், பாதிக்கப்பட்டவர் சிறையில் வாடுகிறார், உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க எந்த வழக்கறிஞரோ அல்லது அதிகாரியோ அவரது வாதத்திற்கு வருவதில்லை. எல்லோரும் பயப்படுகிறார்கள், உண்மையில், வழக்கறிஞர்கள் முன்வருவதில்லை, நீதிபதிகளும் வழக்குகளை கேட்க மறுக்கிறார்கள்.” என்றார்.

2014 டிசம்பரில் பெஷாவர் ராணுவப் பள்ளி மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் இம்ரான், பயங்கரமான சம்பவம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தேசத்தை ஒன்றிணைத்தது என்று கூறினார். “சியால்கோட் சம்பவத்திற்குப் பிறகு, இது போன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் நடக்க விட மாட்டோம் என்று ஒட்டுமொத்த தேசமும் முடிவு செய்துள்ளது.”

பிரியந்தகுமாரவுக்காக ஒ இலட்சம் அமெரிக்க டொலர் நிதி திரட்டியுள்ளதாகவும், அவரது குடும்பம் அவரது மாதச் சம்பளத்தை தொடர்ந்து பெறும் என்றும் சியால்கோட்டில் உள்ள வணிக சமூகம் தன்னிடம் தெரிவித்ததாக பிரதமர் இம்ரான் கூறினார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடிச்சுவடுகளை முழு தேசமும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும், உலமாக்கள் அவரது போதனைகளைப் பரப்புவதற்காகவும் தான் ரஹ்மதுல்-லில்-ஆலமீன் ஆணையத்தை நிறுவியதாக பிரதமர் கூறினார்.

“ஆனால் நாங்கள் வேறு திசையில் செல்கிறோம்,” என்று அவர் கூறினார், புனித நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் படிக்க தேசத்திற்கு அழைப்பு விடுத்தார்.

“இஸ்லாத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டது நமது நாடு மட்டுமே. ஆனால் இந்த சம்பவம் எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறிய அவர், வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து தனக்கு பல செய்திகள் வந்தன.

“வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாது, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைக் கண்டு அவர்கள் மதத்தை விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்.”

பாகிஸ்தானை இழிவுபடுத்தும் முயற்சியில் சியால்கோட் துயர சம்பவம் இந்தியாவில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது என்றும் பிரதமர் இம்ரான் கூறினார். “அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்த சம்பவத்தை பாகிஸ்தானில் ஒரு வழக்கமான நிகழ்வு என்று அழைத்தன, இது அநீதியானது,” என்று அவர் கூறினார். உயிருடன் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

தனது உரையை முடித்த பிரதமர் மீண்டும் அட்னானுக்கு அஞ்சலி செலுத்தினார். “கும்பல் பிரியந்தகுமாரவிற்கு செய்ததைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. ஆனால் அட்னானைப் பார்த்தது மனிதநேயத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை மீட்டெடுத்தது.”

மார்ச் 23 அன்று அட்னானுக்கு தம்கா-இ-ஷுஜாத் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment