நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் இன்று (07) மதியம் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளன.
குடியிருப்பாளர்கள் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென வெடித்து அடுப்புக்கள்எபலத்த சேதம் அடைந்துள்ளன.
இந்த வெடிப்பு சம்பவங்களினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் நுவரெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நானுஓயா எடின்புரோ தோட்டத்திலும், பூண்டுலோயா ஹெரோ தோட்டத்திலும், அட்டன் வெளிஓயா மேற்பிரிவு தோட்டத்திலும் இன்றைய தினம் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
–க.கிஷாந்தன்-




