நல்லூர் வரவு செலவு திட்டம் நிறைவேறியது: கூட்டமைப்பு, முன்னணி எதிர்ப்பு!

Date:

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மணிவண்ணன் அணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள் (மணிவண்ணன் அணி), ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தல ஒரு உறுப்பினர் என 12 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் என 8 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தர்.

இதனால் தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் 6 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தல ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச்...

மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் 64 ரன்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி

அவுஸ்​திரேலியா - பங்களாதேஷ் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2வது டெஸ்ட்...

யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !

யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்