‘உலகில் அதிக சத்தமாக ஏப்பமிடுபவர்’: கின்னஸ் சாதனை படைத்த ஆண்!

Date:

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நெவில் ஷார்ப்  என்பவர் அதிக சத்தமாக ஏப்பம் விட்டு, உலகின் அதிக சத்த ஏப்பக்காரர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த போல் ஹன் செய்த சாதனையை அவர் முறியடித்தார்.

ஜூலை 29 அன்று, நெவில்லின் மிகப்பெரிய ஏப்பம், அவுஸ்திரேலியாவில் 112.4 டெசிபல்களில் பதிவு செய்யப்பட்டது.

கின்னஸ் உலக சாதனை படைத்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஒரு பெண் டெசிபல் மீட்டரை வைத்திருக்கும் போது, அவர் ஏப்பம் விட்டார். அவரது முதல் முயற்சியில் 110.0 டெசிபல் பதிவானது.

12 வருடங்களின் முன் இங்கிலாந்தின் போல் ஹன் 109.9 டெசிபல் அளவில் ஏப்பமிட்டதே உலக சாதனையாக இருந்தது.

https://twitter.com/i/status/1465744433287204879

ஏப்பம் விடுவதைச் சொல்லிக்கொடுத்தவர் தம்முடைய அக்கா என்கிறார் அவர். அதை ஒழுங்காக வெளியிடக் கடும் பயிற்சி மேற்கொண்டதாக நெவல் கூறினார்.

இருப்பினும் கின்னஸ் உலக சாதனை படைக்கத் தம்மை ஊக்குவித்தது துணைவியாரே என்கிறார் இந்த ஏப்ப மன்னன். முறியடித்தது.

spot_imgspot_img

More like this
Related

உறுப்பு தானம் மூலம் பிறர் வாழ்வை வளப்படுத்தி மறையாத மாமனிதர்கள்!

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் உலக உடல் உறுப்பு...

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: ஊழியர்களின் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில்...

28 வயது காதலனுக்காக குழந்தையை வீதியில் விட்டுச்சென்ற 38 வயது தாய்

வத்தேகம பொலிஸ் பிரிவின் யதிரவன பகுதியில் உள்ள ஒரு குறுக்குச் சாலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்