விளையாட்டு

இலங்கையை காப்பாற்றி தனஞ்சய டி சில்வா!

மேற்கு இந்தியத் தீவுகளிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. நேற்றைய நான்காவது நாள் முடிவடையும் போது, ​​இலங்கை 279 ரன்கள் முன்னிலையில் இருந்தது, இன்னும் இரண்டு விக்கெட்டுகள் கைவசமுள்ளது.

தனஞ்சய டி சில்வா, 259 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

முதல் இன்னிங்சில் இலங்கை 204 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத்தீவுகள் முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்களை பெற்றது.

49 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்சில் சீராக விக்கெட்டை இழக்க ஆரம்பித்த போது, தனஞ்சய டி சில்வா, அணி காப்பாற்றினார்.

பதும் நிசங்க 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரும், தனஞ்சயவும் 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். பின்னர், ரமேஷ் மெண்டிஸுடன் 51 ரன்கள் எடுத்தார்.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 6, ஓஷத பெர்னாண்டோ 14, சரித் அசலங்க 19, சந்திமல் 2, மத்யூஸ் 1 என விரைவாக விக்கெட்டுக்கள் இழக்கப்பட்ட போது, 10ஆம் இலக்கத்தில் களமிறங்கிய லசித் எம்புல்தெனியவுடன் இணைந்து, வலுவான இணப்பாட்டத்தை ஏற்படுத்தினார் தனஞ்சய.

நேற்றைய ஆட்ட முடிவில் இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 328 ஓட்டங்களை பெற்றுள்ளது. எம்புல்தெனிய – தனஞ்சய இணை 107 ஓட்டங்களை பகிர்ந்தனர். தனஞ்சய எட்டாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். 153 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். எம்புல் தெனிய 110 பந்துகளை சந்தித்து 25 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இன்று போட்டியின் 5வது நாள்.

தற்போது வரை இலங்கை 2 விக்கெட் கைவசமிருக்க 279 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. காலி மைதானத்தில் அதிகபட்ச சேஸிங் 268 தான். 2019இல் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை இந்த இலக்கை அடைந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்திய கிரிக்கெட்டின் ராக்ஸ்டார் பற்றி சில சுவையான தகவல்கள்!

divya divya

பங்களாதேஷை பந்தாடியது இலங்கை!

Pagetamil

ஐ.பி.எல் ஆரம்பிக்க முன்னரே ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா: ஆர்.சி.பி தொடக்கவீரருக்கும் தொற்று!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!