இன்றைய வானிலை

Date:

மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அது அடுத்த சில நாட்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பிரதானமாக வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

யாழ்ப்பாணம்- சீரான வானிலை.
மன்னார்- சிறிதளவில் மழை பெய்யும்
.மட்டக்களப்பு- சீரான வானிலை.
திருகோணமலை- சீரான வானிலை.
கண்டி- பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
நுவரெலியா- பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
இரத்தினபுரி- பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
அனுராதபுரம்- சீரான வானிலை.
கொழும்பு- சீரான வானிலை.
காலி- சீரான வானிலை.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

உணவு நஞ்சானதால் 35 மாணவர்கள் பாதிப்பு

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் விளைவாக உணவு நஞ்சானதாகக் கருதப்படும் நிலையில்,...

காமுகனின் பிணை இரத்து

வட மத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க, அனுராதபுர...

யாழில் நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு, பூலாசிட்டி பகுதியில், நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்