நேற்ற 744 தொற்றாளர்கள், 26 மரணங்கள்!

Date:

நேற்று 744 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 564,733 ஆக உயர்ந்துள்ளது.

அனைத்து தொற்றாளர்களும் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது 9,578 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 396 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,783 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 2,721 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 26 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் இலங்கையில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,057 ஆக அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்