பிரசவ வலியுடன் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தை பிரசவித்த நியூசிலாந்து பெண் எம்.பி!

Date:

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரசவ வலியோடு சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே வைத்தியசாலை இருப்பதால் அவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டார்.

அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.

இதனிடையே பிரசவ வலியோடு சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் “முக்கியமான செய்தி! இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது. ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை உள்ளது. அவளின் தந்தையை போலவே” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்