மாடிப்படியிலிருந்து தவறி விழுந்தவர் மரணம்!

Date:

நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரர் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உணவகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக உணவகத்தின் நிர்வாகம் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருந்து முடிந்து நான்காவது மாடியில் உள்ள தனது அறைக்கு செல்ல முயன்ற போது, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வெலிமட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்