25.9 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இந்தியா

தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று!

பெங்களுருவுக்கு வந்த தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த இருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அடுத்தக் கட்ட ஆய்வுக்கும் ஓமைக்ரோன் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா எனக் கண்டறியவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க நாட்டினர் இருவரும் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தென்னாபிரிக்காவில்தான் கடந்த 24ஆம் திகதி முதல்முறையாக இந்த ஓமைக்ரோன் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால்கண்டறியப்பட்டது. அதன்பின் ஹொங்கொங், பொட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஓமைக்ரோன் வைரஸ் அச்சத்தால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில் பெங்களூரு நகருக்கு நேற்று வந்த தென்னாபிரிக்க நாட்டினர் இருவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்கள் உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஓமைக்ரோன் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா எனக் கண்டறிய அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களு கிராமப்புற துணை ஆணையர் கே. ஸ்ரீநிவாஸ் கூறுகையில் ”நவம்பர் 1ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை தென்னாபிரிக்காவில் இருந்து 94 பேர் வந்துள்ளனர். அதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாரும் அச்சப்படத் தேவையில்லை.

தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.அவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், அடுத்தகட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

10 நாடுகள் எச்சரிக்கைப் பட்டியலி்ல் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். தொற்று இருந்தால் தனிமைப்படுத்தப்படுவார்கள். நெகட்டிவ் வந்தால் மட்டும் அவர்கள் விமானநிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

நெகட்டிவ் வந்தாலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வீட்டில் 7 நாட்கள் தனிமையில் இருந்து அங்கு மறுபடியும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எச்சரிக்கைப் பட்டியலி்ல் உள்ள நாடுகளில் இருந்து கடந்த 26ஆம் திகதிவரை பெங்களூருவுக்கு 584 பேர் வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

Leave a Comment