இலங்கையின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த வளிமண்டலத் தளம்பல் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த சில மணி நேரங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளிலும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் பலத்த மழையுடன், 40-50 km/h வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் -அதிகபட்சமாக 60 km/h – கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.



