அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பேரணிக்குள் தாறுமாறாக ஓடிய வாகனம்: 5 பேர் பலி!

Date:

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் எஸ்யுவி கார் ஒன்று புகுந்து தாறுமாறாக ஓடியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

விஸ்கான்ஸின் மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான மில்வூகீயில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் ஞாயிறன்று நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென சிவப்பு நிற எஸ்யுவி ரக கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து தாறுமாறாக ஓடியது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நகரில் உள்ள 6 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி காவல்துறை தலைவர் டான் தாம்ப்சன் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், “திடீரென தாறுமாறாக ஓடிய வாகனம் பலர் மீது மோதியது. அதில் சிறுவர்களும் இருந்தனர். உடனடியாக உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை. காயமடைந்தவர்களில் 15 பேர் குழந்தைகள். சம்பவத்தின் போது அந்த குறிப்பிட்ட வாகனத்தை நோக்கி அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு காரை நிறுத்தச் செய்தார். இந்த சம்பவத்தால், திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படாது. சாலைகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டிவந்தவரைப் பிடித்து விசாரித்து வருகின்றோம். காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு விஸ்கான்ஸின் மில்வூகீ பகுதிக்கு வேறு ஏதும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரியவில்லை ” என்றார்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு விவரிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தீவிரவாத சதிச் செயலா என்ற கோணத்தில் பொலிஸார், உளவுப் பிரிவினர் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

பின்னர் வெளியாகிய தகவல்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 என்பதும், 40 பேர் காயமடைந்ததும் தெரிய வந்தது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியுடன் காட்டுக்குகைக்குள் குடித்தனம் நடத்திய ரவிச்சந்திரனுக்கு பிணை!

உடதும்பர காவல் பிரிவுக்கு உட்பட்ட கரம்பகேதிய பகுதியில், மலை உச்சியில் உள்ள...

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்