கொல்பவன் வெல்வான்: யாழில் புலிகளின் கிளைமோர் மீட்கப்பட்டதாம்!

Date:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51வது படைத்தளம் தெரிவித்துள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாழடைந்த வீடொன்றின் மலசலகூட குழிக்குள் இருந்து அது மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51வது படைத்தளம் சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறுவனிடம் கார் ஓட்டக்கொடுத்த தந்தை மீதும் வழக்கு

புதன்கிழமை (13) அன்று, 15 வயது பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற...

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்