ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

Date:

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பதிவுசெய்யப்பட்ட 74 இந்து ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மத்தியில் இருந்து ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் சி.மோகனராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதோடு இந்து ஆலயங்கள் இடர்கால உதவிகளை புரிதல், அறநெறி கல்வியை ஊக்குவித்தல், ஆலயங்களை பிணக்குகள் இன்றி ஒற்றுமையாக கொண்டு செல்லல், மதமாற்றத்தை கட்டுப்படுத்தல், சமூக ஏற்றத்தாழ்வு பாராது வழிபட வழிவகுத்தல், வீணான ஆடம்பர செலவுகளை குறைத்து அதை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுதல், உள்ளூர் கலைஞர்களை ஊக்குவித்தல், வெளிப்படை தன்மையுடன் கணக்கு நடவடிக்கைகளை கையாலால் உள்ளிடட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு இந்து ஆலயங்களுக்கான விழிப்புணர்வு விரிவுரைகளை இடம்பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் கடற்பகுதி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டுள்ளது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்