60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும்.
இதன்படி, முதல் கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது டோஸாக எந்த தடுப்பூசியை பெற்றிருந்தாலும்,
பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும்.
தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற தகுதியுடையவர்கள்.
இரண்டாவது டோஸைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்ட நிலையில், கோவிட்-19 தொழில்நுட்பக் குழு, பூஸ்டர் தடுப்பூசியை மூன்று மாதங்களுக்குப் பிறகு வயதானவர்களுக்கு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.