நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,034 ஆக அதிகரித்துள்ளது.
9 ஆண்களும் 9 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
9 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.



