வவுனியாவில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது

Date:

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று (16) இடம்பெற்று இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களுக்கு போலியான இலக்க தகடுகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும், அம் மோட்டர் சைக்கிள் இலக்கத் தகடுகளை பொருத்தி திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் நிலையம் ஒன்றும் சோதனை செய்யப்பட்டது.

இதன்போது குறித்த நிலையத்தில் கடமையாற்றிய இளைஞர் ஒருவர் விசேட அதிடிப்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அங்கு இருந்த கணினி மற்றும் வாகன இலக்கதகடுகள் என்பனவும் விசேட அதிடிப்படையினால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...

“வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” – நடிகை சிம்ரன் பகிர்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை...

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்