25.7 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

எம்.ஜி.ஆர் முதல் நம்பியார் வரை: யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் ஆன ஒரு இரசிகனின் கதை!

யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் நேற்று (11) அதிகாலை காலமாகியிருந்தார்.

நேற்று மதியம் கோப்பாய் இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனாவார்.

யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையிடப்படும் சமயங்களில், அதை கொண்டாட்டமாக மாற்றிய இரசிகர்களில் அவரும் ஒருவர்.

எம்.ஜி.ஆர் இரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம், திரைப்படத்தின் முதல் காட்சிகளில் திரையரங்களிற்கு அருகில் தாகசாந்தி நிலையங்கள் அமைத்து நீராகாரம் வழங்கினார்.

அப்போது கொழும்பிலிருந்து வெளியாகும் தந்தி பத்திரிகையில் அது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகியிருந்தன. அந்த பத்திரிகை பிரதிகளுடன், கடல்வழியாக தமிழகம் சென்று, எம்.ஜி.ஆரை சந்தித்து பேசியுள்ளார். பத்திரிகை பிரதிகளையும் எம்.ஜி.ஆருக்கு காண்பித்தார்.

அப்போது இலங்கையில் உற்பத்தியாகம் சவர்க்காரம், பவுடர் என்பவற்றிற்கு தமிழகத்தில் கிராக்கியிருந்தது. தமிழகம் செல்லும் போது, அவற்றையும் எடுத்து சென்று எம்.ஜி.ஆருக்கு பரிசளித்தார்.

அவரது அன்பில் நெகிழ்ந்த எம்.ஜிஆர் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அவருக்கு பரிசளித்தார். சுந்தரலிங்கம் காலமாகும் வரை அந்த கண்ணாடியை அணிந்து வந்தார்.

அத்துடன், நடிகர்கள் நம்பியார், கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆரின் கழுத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு காயத்தை பார்த்த போது

யாழ்ப்பாணம் கல்விங்காட்டில் எம்.ஜி.ஆர் சிலையொன்றை அமைத்து, வருடாந்தம் அவரது பிறந்த, மரணித்த நாட்களில் அஞ்சலி செலுத்தி வந்தார்.

நடிகர் நம்பியாருடன்

நடிகர் கோபால கிருஷ்ணனுடன்
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment