மாத்தறை, மாலிம்பட வடக்குப் பகுதியில் இன்று (10) காலை நபர் ஒருவர் தனது மனைவி வெட்டிக் கொலை செய்துள்ளார். மாமியாரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயான கீதானி களுஆராச்சி (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்.
சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர். கொலையின் பின் அவர் தனது இரண்டரை வயதுக் குழந்தையுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று பின்னர் மொரவக பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
54 வயதுடைய மாமியார் தலையில் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1