நீதிமன்றத்தை அவமதித்து கடுவெல நீதிமன்றத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 5 பேரை உடனடியாக கைது செய்யுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது நீதிமன்றத்தை அவமதித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கடுவெல பொலிஸார் வழங்கிய தகவலை கருத்திற்கொண்ட நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1