24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
ஆன்மிகம்

குரு பெயர்ச்சி: நட்சத்திரங்களுக்கு ஒரு வரி பலன்கள்

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்

நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குருவின் பலம்

குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

நிகழும் மங்களகராமன ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம் 13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி – சதய நக்ஷத்ரம் – வ்யாகாத நாமயோகம் – பாலவ கரணம் – சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 3024க்கு (மாலை மணி 6.21க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.

நன்மை பெறும் ராசிகள் மிதுனம் – சிம்மம் – துலாம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள் மேஷம் – ரிஷபம் – விருச்சிகம் – மகரம் – கும்பம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள் கடகம் – கன்னி – தனுசு – மீனம்

தற்போது மாறக்கூடிய குருபகவான் கும்ப ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மிதுன ராசியையும் – ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.

குரு பயோடேட்டா

சொந்த வீடு – தனுசு, மீனம்

உச்சராசி – கடகம்

நீச்சராசி – மகரம்

திசை – வடக்கு

அதிதேவதை – பிரம்மா

நிறம் – மஞ்சள்

வாகனம் – யானை

தானியம் – கொண்டைக்கடலை

மலர் – வெண்முல்லை

வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை

ரத்தினம் – புஷ்பராகம்

நிவேதனம் – கடலைப்பொடி சாதம்

உலோகம் – தங்கம்

இனம் – ஆண்

உறுப்பு – தசை

நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்

பகைகிரகம் – புதன், சுக்கிரன்

மனைவி – தாரை

பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்

பிரதானதலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்

தகுதி -தேவகுரு

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

******

குருவால் ஏற்படும் பாக்கியங்கள்

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

******

அசுபதி

கேதுவை நக்ஷத்ரநாயகனாக கொண்ட அசுபதி நட்சத்திர அன்பர்களே!

மதிப்பெண்கள் உங்களுக்கு 74% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பொருளாதார முன்னேற்றம் உண்டு

– வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை.

பரிகாரம்

தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், சூரியன்

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், செவ்வாய், வெள்ளி;

திசைகள் கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள் சிவப்பு, மஞ்சள்

எண்கள் 3, 7, 9

*****

பரணி

சுக்ரனை நட்சத்திர நாயகனாக கொண்ட பரணி நட்சத்திர அன்பர்களே,

மதிப்பெண்கள் உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

– வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைதோறூம் பெருமாள் கோவிலிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சுக்ரன், செவ்வாய்

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், புதன், வெள்ளி

திசைகள் தெற்கு, தென்மேற்கு

நிறங்கள் சிவப்பு, வெள்ளை

எண்கள் 5, 6

*****

கிருத்திகை

சூரியனை நட்சத்திர நாயகனாக கொண்ட கிருத்திகை நட்சத்திர அன்பர்களே!

மதிப்பெண்கள் உங்களுக்கு 76% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ மனக்குழப்பம் தீரும்.

– வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்

மாதம்தோறூம் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சூர்யன், செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் புதன், வெள்ளி

திசைகள் மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள் நீலம், பச்சை

எண்கள் 1, 5, 6

*****

ரோஹிணி

சந்திரனை நட்சத்திர நாயகனாக கொண்ட ரோகிணி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 81% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ வீண்செலவு குறையும்.

– பண விஷயங்களில் கவனம் தேவை.

பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவியுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சந்திரன், சுக்ரன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், வெள்ளி

திசைகள் வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள் வெள்ளை, மஞ்சள்

எண்கள் 2, 6

*****

மிருகசீரிஷம்

செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 82% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பதவி உயர்வு கிடைக்க பெறலாம்.

– குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்

பரிகாரம் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் ஞாயிறு, வெள்ளி

திசைகள் கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள் சிவப்பு, வெள்ளை

எண்கள் 1, 6, 9

*****

திருவாதிரை

ராகு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட திருவாதிரை நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பணவரத்து திருப்தி தரும்

– வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்

பரிகாரம் தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சம்பழ சாதம் செய்து நைவேத்யம் செய்யலாம்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், புதன், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள் வடக்கு, வடமேற்கு

நிறங்கள் சிவப்பு, பச்சை

எண்கள் 1, 5, 6

*****

புனர்பூசம்

குரு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட புனர்பூச நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 71% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ ஆன்மீக நாட்டம் உண்டாகும்.

– வீண் அலைச்சல் ஏற்படலாம்.

பரிகாரம் தினமும் ஸ்ரீராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள் புதன், குரு, சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் புதன், வியாழன், வெள்ளி

திசைகள் மேற்கு, தென்மேற்கு

நிறங்கள் சிவப்பு, வெள்ளை

எண்கள் 3, 5, 6

*****

பூசம்

சனி பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட பூச நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 78% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பணம் வரவு நன்றாக இருக்கும்.

– வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை

பரிகாரம் கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சந்திரன், செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள் வடக்கு, தென்மேற்கு

நிறங்கள் சிவப்பு, மஞ்சள்

எண்கள் 1, 6, 9

*****

ஆயில்யம்

புத பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட ஆயில்ய நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ குடும்பத்தில் மரியாதை கூடும்.

– நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

பரிகாரம்

தினமும் அம்பாளை வெள்ளை மலர் கொண்டு வழிபடவும். ஸ்ரீ லலிதாம்பிகையை போற்றி வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சந்திரன், புதன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் வியாழன், வெள்ளி

திசைகள் கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள் மஞ்சள்

எண்கள் 2, 3, 6

*****

மகம்

கேது பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட மக நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ புதியதாக இடம் வாங்குவீர்கள்

– அலைச்சல் அதிகரிக்கும்

பரிகாரம்

தினமும் சூரியபகவானை வழிபாடு செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சூரியன், செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் செவ்வாய், புதன், வெள்ளி;

திசைகள் தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள் சிவப்பு, பச்சை

எண்கள் 5, 6, 9

*****

பூரம்

சுக்ர பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட பூர நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 78% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பொருளாதாரத்தில் ஏற்றம்

– உடல்நலத்தில் கவனம் தேவை

பரிகாரம்

தினமும் சிவபெருமானை வழிபட்டு நந்தி தேவரையும் தரிசனம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சூரியன், சுக்ரன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் ஞாயிறு, வியாழன்;

திசைகள் மேற்கு, தென்மேற்கு

நிறங்கள் சிவப்பு, நீலம்

எண்கள் 1, 3, 6

*****

உத்திரம்

சூர்ய பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட உத்திர நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 74% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ மதிப்பு அதிகரிக்கும்

– உடற்சோர்வு ஏற்படும்

பரிகாரம்

பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சூரியன், புதன்

அதிர்ஷ்ட கிழமைகள் வியாழன், வெள்ளி;

திசைகள் வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள் வெள்ளை, மஞ்சள்

எண்கள் 1, 3, 6

*****

ஹஸ்தம்

சந்திரனை நட்சத்திர நாயகனாக கொண்ட ஹஸ்த நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 69% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பொறுப்புகள் அதிகரிக்கும்

– பேச்சில் நிதானம் அவசியம்

பரிகாரம்

காமாட்சி அம்மனை வழிபட முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட ஹோரைகள் சந்திரன், புதன், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் ஞாயிறு – செவ்வாய் – வியாழன்

திசைகள் கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள் சிவப்பு, மஞ்சள்

எண்கள் 1, 3, 9

*****

சித்திரை

செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட சித்திரை நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 71% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ சமயோசித புத்தி அதிகரிக்கும்

– சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம்பரிகாரம்

பரிகாரம்

திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனை தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், புதன், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள் – புதன் – வெள்ளி

திசைகள் மேற்கு, வடக்கு

நிறங்கள் வெள்ளை

எண்கள் 2, 5, 6

*****

சுவாதி

ராகு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட சுவாதி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 68% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்

– அலைச்சல் உண்டாகலாம்

பரிகாரம்

பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு நெய் தீபம் ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் குரு, சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள் – புதன் – வெள்ளி

திசைகள் வடக்கு, மேற்கு

நிறங்கள் வெள்ளை, பச்சை

எண்கள் 2, 5, 6

*****

விசாகம்

குரு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட விசாக நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ செயல் திறன் அதிகரிக்கும்

– குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்

பரிகாரம்

குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி வழிபட மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள் – வியாழன் – வெள்ளி

திசைகள் மேற்கு, தெற்கு

நிறங்கள் வெள்ளை, நீலம்

எண்கள் 2, 6, 9

*****

அனுஷம்

சனி பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட அனுஷ நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ எதிர்ப்புகள் விலகும்

– நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்

பரிகாரம்

நவகிரகங்களை வழிபட்டு ஒன்பது முறை வலம் வர இன்னல்கள் மறையும்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் ஞாயிறு – செவ்வாய் – வியாழன்

திசைகள் கிழக்கு, தெற்கு

நிறங்கள் வெள்ளை, மஞ்சள்

எண்கள் 1, 3, 9

*****

கேட்டை

புத பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட கேட்டை நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 69% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்

– காரிய தடைதாமதம் ஏற்படும்

பரிகாரம்

கந்தர் ச்ஷ்டி கவசம் சொல்லி முருகப் பெருமானை வழிபடுங்கள். ஏழை எளியோருக்கு உதவுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் புதன், குரு, சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் புதன், வெள்ளி

திசைகள் தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள் பச்சை, வெள்ளை

எண்கள் 5, 6

*****

மூலம்

கேது பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட மூல நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ கடன்கள் பைசலாகும்

– வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்

குருவாயூர் சென்று குருவாயூரப்பனை தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் வியாழன், வெள்ளி

திசைகள் மேற்கு, வடமேற்கு

நிறங்கள் வெள்ளை, மஞ்சள்

எண்கள் 3, 6, 9

*****

பூராடம்

சுக்ர பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட பூராட நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

– எதிர்பாராத தடங்கல்கள் வரலாம்

பரிகாரம்

குடும்பத்தில் அமைதி உண்டாக தியானம், யோகா போன்றவற்றை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சுக்ரன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் செவ்வாய், வெள்ளி

திசைகள் வடக்கு, வடகிழக்கு

நிறங்கள் சிவப்பு, வெள்ளை

எண்கள் 6, 9

*****

உத்திராடம்

சூர்ய பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட உத்திராட நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 69% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பணவரத்து திருப்தி தரும்

– திடீரென்று கோபம் வரும்

பரிகாரம்

முன்னோர் வழிபாடு செய்வது நல்லது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவதும் நல்லது.

அதிர்ஷ்ட ஹோரைகள் சூரியன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் ஞாயிறு, வியாழன்

திசைகள் கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள் வெள்ளை, மஞ்சள்

எண்கள் 1, 3, 6

*****

திருவோணம்

சந்திரனை நட்சத்திர நாயகனாக கொண்ட திருவோண நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 68% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும்.

– பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை.

பரிகாரம்

விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்கி பதினொரு முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள் சந்திரன், செவ்வாய், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் வியாழன், வெள்ளி

திசைகள் தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள் வெளிர் நீலம், மஞ்சல்

எண்கள் 3, 5, 6

*****

அவிட்டம்

செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட அவிட்ட நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

– பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்

ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள் மேற்கு, தென்மேற்கு

நிறங்கள் நீலம், மஞ்சள்

எண்கள் 2, 3, 6

*****

சதயம்

ராகு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட சதய நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 76% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும்.

– உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்
ஸ்ரீ லஷ்மி ஸகஸ்ரநாமத்தை உச்சரித்து வாருங்கள். தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் புதன், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள் வடக்கு, வடகிழக்கு

நிறங்கள் வெள்ளை, சிவப்பு

எண்கள் 1, 3, 9

*****

பூரட்டாதி

குரு பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 71% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ எதிர்ப்புகள் விலகும்.

– வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்

வியாழன் தோறும் நெய்விளக்கேற்றி குருபகவானை வழிபடவும். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் குரு, சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், வெள்ளி

திசைகள் தெற்கு, தென்மேற்கு

எண்கள் 2, 3, 6

நிறங்கள் வெள்ளை, பச்சை

*****

உத்திரட்டாதி

சனி பகவானைநட்சத்திர நாயகனாக கொண்ட உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 68% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பயணங்கள் வெற்றியை தரும்.

– மனம் ஒரு நிலைப்படாது.

பரிகாரம்

துளசிமாலை சாற்றி பெருமாளுக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள் செவ்வாய், சுக்ரன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள் புதன், வெள்ளி

திசைகள் மேற்கு, வடக்கு

எண்கள் 2, 5, 6

நிறங்கள் பச்சை, வெள்ளை

*****

ரேவதி

புத பகவானை நட்சத்திர நாயகனாக கொண்ட ரேவதி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு 72% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பணச்சிக்கல் தீரும்.

– வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

பரிகாரம்

உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று அர்ச்சனை செய்து குருபகவானை வழிபடவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள் புதன், குரு, சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள், வியாழன்

திசைகள் வடக்கு, வடகிழக்கு

எண்கள் 2, 3, 9

நிறங்கள் வெள்ளை, நீலம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment