திருடப்பட்ட கார் மீட்பு!

Date:

குருநாகலில் உள்ள உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த போது திருடப்பட்ட 9 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார், மாலபேயில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், திருடப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள், வாகனத்தை திருட பயன்படுத்திய மற்றுமொரு வாகனம் ஒன்றையும், எயார் ரைபிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி, குருநாகல் – கொகரெல்ல பகுதியில் வைத்து திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிப்பதற்காக குருநாகல் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள், தாம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி குருநாகலில் உள்ள உரிமையாளரின் வீட்டுக்குள் நுழைந்து வாகனத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...

வேலூர் கோட்டை திப்பு மஹாலில் இருந்து விடுதலைப்புலிகளின் போராளிகள் தப்பியது எப்படி?

தமிழ்​நாட்​டில் உள்ள சிறைகளில் இருந்து கைதி​கள் அவ்​வப்​போது தப்பி ஓடும் சம்​பவங்​கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்