பல இறக்குமதியாளர்கள் வரிச்சலுகையின் கீழ் தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா கருத்து தெரிவிக்கையில், தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டுக்குள் கடத்தி, சந்தையில் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறையை உருவாக்கி அதிக லாபம் ஈட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றார்.
தாம் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரியதாகவும், அரசாங்கம் அனுமதி வழங்குவதைத் தொடர்ந்து தாமதப்படுத்துகிறது என்றும் கூறினார்.
இறக்குமதியாளர்கள் தற்போது நவம்பர் மாதம் 18,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவித்த அவர், ரூ.50 வரிச் சலுகை கோரிய வேளையில் ஒப்புதலுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற தேங்காய் எண்ணெயை வழங்குவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் முயற்சிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது உள்ளூர் உற்பத்தியாளர்களையும் மோசமாக பாதிக்கும் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.