29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பொலிஸ் நிலையத்தில் நிர்வாணமாக்கி பாலியல் சித்திரவதை: சிரேஷ்ட டிஐஜி மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்கள்!

கிரியெல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ரன்மல் கொடிதுவக்கு மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக சட்ட நிறுவனம் ஒன்றினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சாரதி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான நீலகண்டன் சட்ட நிறுவனம், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு விரிவான கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகள் சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு சாரதியை வீதியில் தாக்கியதைக் காண்பித்தது.இதையடுத்து, சிரேஷ்ட டிஐஜி மருத்துவ சேவைகள் மற்றும் நலன்புரிப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், நீலகண்டன் சட்ட நிறுவனத்தின் கூற்றுப்படி, இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில், சிரேஷ்ட டிஐஜியின் வாகனத்தை முந்திச் சென்றதை தொடர்ந்து, அவரது வாகனம் வழிமறிக்கப்பட்டு, சிரேஷ்ட டிஐஜி மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கியதாக ஆரம்பத்தில் குற்றம் சுமத்தப்பட்டனர். வீதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களின் வாடிக்கையாளர் கிரியெல்ல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறைக்குள் சித்திரவதை செய்யப்பட்டார்.

தங்கள் வாடிக்கையாளர் நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக சட்ட நிறுவனம் கூறியது. அப்போது இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் சாரதியை மூத்த டிஐஜி தாக்கினார்.

தங்கள் கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளது.

“எங்கள் வாடிக்கையாளர் மேலே குறிப்பிடப்பட்ட திரு. ரன்மல் கொடிதுவாக்கு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (“SDIG”) மற்றும் இலங்கை பொலிஸ் படையின் இரண்டு அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு, உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

டிஐஜி தன்னை கழுத்து, தலை, வயிறு மற்றும் பிறப்புறுப்புகளில் தாக்கியதாக பாதிக்கப்பட்ட நபர் வெளிப்படுத்தினார்.

கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் உள்ள மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்படி குற்றங்களைச் செய்வதற்கு டிஐஜி ரன்மல் கொடிதுவாக்குக்கு உதவியதாக பாதிக்கப்பட்ட நபர் தனது கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் கிரியெல்ல கிராமிய வைத்தியசாலையில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அங்கு அவரது காயங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது..

மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி மருத்துவ சட்ட அறிக்கை படிவத்தையும் பூர்த்தி செய்திருந்தார்.

இச்சம்பவத்தால் சாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருக்கு அச்சுறுத்தலான நினைலைமையில் வாழ்வதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணையை நடத்தும்படியும் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment