அண்ணாத்த படத்தின் டிரைலர் வெளியானது

Date:

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. விஸ்வாசம் படத்திற்கு பிறகு டைரக்டர் சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணன், தங்கை பாசப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகிற நவம்பர் 4ஆம் திகதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கெனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்