பூஜித, ஹேமசிறிக்கு எதிரான வழக்கை நிறைவுக்கு கொண்டு வந்த கொழும்பு நீதவான் நீதிமன்றம்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியவர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று (27) நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பதில் நீதவான் சஞ்சய கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக மூவரடங்கிய விஷேட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தனர்.

அதனால் அவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை நிறைவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதவான் குறித்த வழக்கு விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்