சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் மருத்துவ வழங்கல் மற்றும் நலன்புரி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. பி. எம். குணரத்ன சப்ரகமுவ மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒருவரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1