பதக்கங்களை குவிக்கும் மாதவனின் மகன்!

Date:

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாழ்க்கையைத் துவங்கிய நடிகர் மாதவன் தற்போது தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை கொடிகட்டி பறந்து வருகிறார். சாக்லேட் பாய் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் தற்போது 50 வயதாகியும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கூடவே இயக்குநர் ஆனந்த் மஹாதேவனுடன் இணைந்து “ராக்கெட் நம்பி வளைவு” எனும் படம் மூலம் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய மகன் வேதாந்த் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான 47 ஆவது ஜுனியர் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

அதில் 4 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என 7 பதக்கங்களை வென்றுள்ளார். இவருடைய சாதனைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வேதாந்த், ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்