ஆர்யாவுக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தம்

Date:

ஆர்யா நடித்துவரும் புதிய படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ ஆகிய படங்களுக்குப் பிறகு எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் ஆர்யா. ஆனால், பல்வேறு கதைகளைக் கேட்டு வருகிறார். இதில் சக்தி செளந்தர்ராஜன் கதையில் நடித்து, தயாரிக்க முன்வந்தார் ஆர்யா. இதற்கு முன்பாக ‘டெடி’ படத்தில் இந்தக் கூட்டணி இணைந்து தயாரித்துள்ளது.

நேற்று முன்தினம் (25) சென்னையில் சக்தி செளந்தர்ராஜன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் சிம்ரன், தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக இமான், எடிட்டராக பிரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...

நடிகை ட்விஷா உடலில் பல்வேறு காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

நடிகை ட்விஷா சர்மா உடலில் பல்​வேறு காயங்​கள் இருந்​த​தாக பிரேத பரிசோதனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்