நோர்வுட் வென்ச்சர் எஸ்டேட் பகுதியில்வலையில் சிக்கி உயிரிழந்த ஒரு மலைச் சிறுத்தையின் சடலம் fண்டெடுக்கப்பட்டுள்ளது.
நன்கு வளர்ந்த பெண் மலை சிறுத்தைக்கு சுமார் 4 வயது இருக்கும். சிறுத்தையின் உடலின் நடுப் பகுதி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
தேயிலை தோட்டத்தில் இடப்பட்ட இந்த வலையில் சிறுத்தை பல நாட்களின் முன்னர் சிக்கியுள்ளது. அதன் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு ஹட்டன் நீதவான் மற்றும் நீதவான் ஏ.ஐ.ஹெட்டிவத்த உத்தரவிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1