ஐசிசி ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி, வெறும் 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. 70 பந்துகள் மீதமிருக்க, 6 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
டுபாயில் நடந்த இந்த ஆட்டத்தில், நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் கிறிஸ்கெயில் மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றார். அவர் 13 ஓட்டங்களை பெற்றார். ஹெட்மையர் 9 ஓட்டங்களை பெற்றார்.
அடில் ரஷீத் 2.2 ஓவர்கள் வீசி 2 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இலக்கை விரட்டிய இங்கிலாந்து 8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களை பெற்றது.
ஜோஸ் பட்லர் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தார்.
மேற்கிந்தியத்தீவுகளின் அஹீல் ஹொசைன் 24 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
ஆட்டநாயகன் அடில் ரஷீத்.