‘நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை நடந்திருக்காது’: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Date:

உரப் பிரச்சனையில் தனது கருத்துக்களை அரசு கணக்கிலெடுக்காததாலேயே இவ்வளவு பிரச்சனைகள் உருவாகியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது உரம் பசளை பிரச்சினை காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கின்றது. அதனடிப்படையில் நீங்கள் உரம் பசளை பிரச்சினை தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் மஹதிவுல்வெவ-திவுறும்கல விகாரையில் இன்று (23) தியான மண்டபத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த போகத்தின் போது முதல் வாரத்தில் பசளையை தடை செய்யப் போவதாக ஊடகங்களில் வெளியானதையடுத்து நான் தனிப்பட்ட முறையிலும், பாராளுமன்ற குழுவின் ஊடாகவும் சம்மநதப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தினேன். ஆனாலும் நான் சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. அதனாலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அமைச்சராக ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் சேதனப் பசளை ஊக்குவிக்கும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். இருந்தும் உடனடியாக சேதனப்பசளையை மாத்திரம் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

மேலும் இவ் பசளை பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதட்ற்கு 5 அல்லது 10 வருடங்கள் காலம் தாமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்