25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
குற்றம்

47 வயது கள்ளக்காதலனுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த 74 வயது கள்ளக்காதலி: தட்டிக்கேட்ட மகன் குத்திக்கொலை!

74 வயதான பெண்ணுக்கும், 47 வயதான ஆணுக்கும் ஏற்பட்ட கள்ளக்காதலால், 28 வயது இளம் குடும்பஸ்தர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

நேற்று (18) நடந்த இந்த சம்பவத்தல், ஒரு பிள்ளையின் தந்தையாக எஸ்.எம்.சமர ருவான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணுக்கும், திருமணமாகாத 47 வயதான ஒருவருக்கும் நீண்டகாலமாக கள்ளக்காதல் உறவிருந்தது.

நேற்று (18) 74 வயதான கள்ளக்காதலியின் வீட்டிற்கு, 47 வயது கள்ளக்காதலன் சென்றுள்ளார்.

கள்ளக்காதலனை வீட்டு அறைக்குள் அழைத்துச் சென்ற காதலி, தான் சமைத்த உணவை ஆசை ஆசையாக ஊட்டி விட்டுள்ளார். கள்ளக்காதலியே ஊட்டிவிடும் கிறக்கத்தில் காதலனும் சொக்கிப் போய், சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

கள்ளக்காதலில் ஈடுபட்ட 74 வயதான தாயின் 28 வயதான மகன், கேகாலை – அலவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார். தாயார் சுகயீனமடைந்ததையடுத்து, அவரை பார்ப்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு வந்துள்ளார்.

நேற்றிரவு கல்பிட்டியிலுள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, வீட்டு அறைக்குள் காதல் ஜோடி உணவு ஊட்டி, கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த கண்றாவி காட்சியை கண்டு, கொதித்துள்ளார். தாயின் கள்ளக்காதலை நீண்டகாலமாக அவர் எதிர்த்தும் வந்திருந்தார்.

அறைக்குள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த ஜோடியை கடுமையாக பேசி, கள்ளக்காதலனை வீட்டை வெளியேறுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து தாயின் கள்ளக் காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அந்த வாய்த்தர்க்கம் முற்றியதால் ஆத்திரமடைந்த தாயின் கள்ளக் காதலன் அருகிலிருந்த கத்தயை எடுத்து கள்ளக் காதலியின் மகனை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலன் கத்தியுடன் தப்பிச்சென்று அமுக்குளிய பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கடந்த காலங்களில் பல கொலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பல வருடங்களாக சிறையில் இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அவர் நீர்கொழும்பில் மூன்று, பொலன்னறுவை மற்றும் புத்தளத்தில் தலா ஒவ்வொரு கொலைகள் என ஐந்து கொலைகளில் முக்கிய சந்தேகநபர் என்று கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment