குருநாகல் ரம்பாவெவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பேஸ்புக் நண்பர்கள் நடத்திய விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர்.
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 24 பேஸ்புக் நண்பர்கள் விருந்தில் கலந்து கொண்டனர். பொலிசார் வந்த போது 22 பேர் தப்பியோடி விட்டனர்.
களியாட்டத்தை ஒழுங்கமைத்தவரும், இசை வழங்கியவரையும் பொலிசார் கைது செய்தனர்.
அங்கிருந்து 175,000 ரூபா பணம், மதுபானங்களுடன் கைப்பற்றப்பட்டன.
தப்பியோடிய சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், அவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1