மன்னாருக்கும் இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இடையே உள்ள கடல் பகுதியை சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற நிபுணர்குழுவின் அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியை பாதுகாக்கும் பல்வேறு யோசனைகளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
உயர் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட கடல் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பான கலாநிதி செவ்வந்த ஜெயக்கொடியால் தொகுக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை கடந்த வாரம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பிலிருந்து தடை செய்யப்பட்ட ஆழ்கடல் இழுவைமடி மீன்பிடி முறை கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாரத்தில் மூன்று நாட்கள் சுமார் 3,000 படகுகள் இப்பகுதிக்குள் நுழைந்து கடல்வாழ் உயிரினங்களை அழிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
நீல திமிங்கலங்கள், டொல்பின்கள் மற்றும் ஆமைகள் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களும் இப்பகுதியைப் பயன்படுத்துகின்றன.
எனவே, இப்பகுதியை சிறப்பு மண்டலமாக அறிவிக்க முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும்.
அந்த அறிக்கையில் திருகோணமலை கடல் பகுதி மற்றும் தெற்கு கடல் பகுதி ஆகியவற்றையும், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளையும் சுற்றுச்சூழல் உணர்திறனான பகுதிகளாக அடையாளமிட்டுள்ளது.