26.4 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

பிரித்தானிய எம்.பி கொலை பயங்கரவாத தாக்குதலே: 17 முறை குத்தி விட்டு அசையாமலிருந்த கொலையாளி!

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் (69) கொலைச்சம்பவம் பங்கரவாத தாக்குதல் என பிரித்தானிய பொலிசார் அறிவித்துள்ளனர்.

நேற்று (15) தனது தொகுதி மக்களுடனான சந்திப்பின் போது, அவர் மீது  பல முறை கத்தியால் குத்தப்பட்டது. 25 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

தெற்கு எசெக்ஸின் லீ-ஆன்-சீ-இல் உள்ள பெல்ஃபேர்ஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்தது.

நடந்து வந்த நபரே பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார்.

காயமடைந்த அமெஸூக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், தாக்குதல் நடத்திய 25 வயது இளைஞனை கைது செய்து, கத்தியை மீட்டனர்.

பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், அமெஸ் கொலை “பயங்கரவாத சம்பவம்” என்று அறிவித்துள்ளது. அதன் பயங்கரவாத பிரிவினரால் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

ஆரம்பகால விசாரணையில் “இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய ஒரு சாத்தியமான உந்துதல்” தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞன், சோமாலிய பின்னணியையுடைய ஒரு பிரிட்டிஷ் நாட்டவர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளிலும் சோதனை நடத்தினர்.

நேற்று, தேவாலயத்தில் தனது தொகுதி மக்களை சந்தித்துக் கொண்டிருந்தார். 12.05 மணியளவில் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சந்தேகநபர், 17 முறை அமெஸை குத்தினார்.

சம்பவ இடத்தில் நின்ற இரண்டு பெண்கள் அலறியபடி வெளியே ஓடி உதவி கோரினர்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வரும் வரையும், சந்தேகநபர் தேவாலயத்திற்குள்ளேயே அமைதியாக காத்திருந்துள்ளார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து “உடனடியாக அமலுக்கு வரும் வகையில்” பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை செயலாளர் பிரிதி படேல் பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பழமைவாத கட்சியை சேர்ந்த அமெஸ், 1983ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment