25.9 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

சன்ரைசர்ஸ் கப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன்?; கடைசிவரை விளக்கம் கூறவில்லை: கொட்டித் தீர்த்த டேவிட் வோர்னர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற கேள்விக்கு இதுவரை விளக்கமும் இல்லை, காரணமும் தெரிவிக்கவில்லை என்று அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த ஆண்டு சீசனிலும் தொடர்வதற்கு டேவிட் வோர்னர் விருப்பமாக இருந்தாலும், அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இந்த சீசனில் கடைசி 5 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன், முன்னாள் கப்டனான வோர்னரை பெஞ்ச்சில் அமர வைத்தனர்.

இந்த சீசனின் நடுப்பகுதியில் வோர்னரிடம் இருந்து கப்டன் பதவி பறிக்கப்பட்டது. கப்டன் பதவி பறிக்கப்பட்ட பின்பிருந்து சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டமும் ஆட்டம் கண்டது. வோர்னருக்கு பதிலாக கேன் வில்லியம்ஸன் கப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வோர்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டபோது வில்லியம்ஸன் கப்டன் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் சில போட்டிகளில் வோர்னர் எதிர்பார்த்த பேட்டிங் செய்யவில்லை என்பதால், அவர் தொடர்ந்து 5 போட்டிகளில் அமரவைக்கப்பட்டார். வோர்னர் என்ற ஒரு சீனியர் வீரர் மட்டும் பெஞ்ச்சில் அமரவைக்கப்படவில்லை என்று சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ் விளக்கமும் அளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையைப் பெற்றுக்கொடுத்த வோர்னர், ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வோர்னருக்கு கப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் அணி நிர்வாகம் கூறவில்லை. அவரை நடத்திய முறையும் சரியில்லை.

அனைத்து சீசன்களிலும் மிகச் சிறப்பாக ஆடிய வோர்னர், இந்த ஐபிஎல் சீசனில் 8 இன்னிங்ஸில் 195 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கில ஏடு ஒன்றுக்கு டேவிட் வோர்னர் அளித்த பேட்டியில் சன்ரைசர்ஸ் கப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கமும், காரணமும் தெரிவிக்கவில்லை. அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கப்டன் பதவியிலிருந்து நீக்கப்படவும், அணியிலிருந்து வெளிேயற்றப்படவும் என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

என்ன காரணம் என 100 சதவீதம் எனக்குத் தெரியாது. சன்ரைசர்ஸ் நிர்வாகத்தினர் மீதும், பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ், லட்சுமண், ரொம் மூடி, முரளிதரன் ஆகியோர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஒரு முடிவு எடுக்கப்படும்போது, அது ஒருமனதாக எடுக்க வேண்டும். ஆனால், எனக்கான மாற்று வீரர் யார், என்னை யார் தேர்வு செய்ய வேண்டும், என்னை யார் விரும்பவில்லை என எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால், கடைசி நாளில், நான் விளையாடப் போவதில்லை என்ற தகவல் மட்டும் என்னிடம் கூறப்பட்டது.

எனக்கு இது மிகுந்த வேதனையாக இருந்தது. நான் ஏன் கப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் கூறப்படவில்லை. கடந்த காலங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை வைத்து சில விஷயங்கள் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் நான் சன்ரைசர்ஸ் அணிக்காக 95 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன்.

ஆனால், 4 போட்டிகளில் மட்டும்தான் மோசமாக விளையாடினேன், 2 முறை ரன் அவுட் ஆகினேன். அதிலும் சென்னை போன்ற மெதுவான, மந்தமான ஆடுகளத்தில்தான் இது நடந்தது. இதுபோன்ற கசப்பான விஷயங்களை ஜீரணிப்பது கடினமானது. ஆனால், நான் ஏன் கப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் , பதில் இனிமேல் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆதலால் அடுத்த கட்டத்துக்கு நான் நகர்ந்துதான் ஆக வேண்டும்.

அடுத்துவரக் கூடிய ஐபிஎல் ஏலத்தை நோக்கியிருக்கிறேன். சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்துவதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை, ஆனால் முடிவு உரிமையாளர்களிடம் உள்ளது. எந்த திசையில் உரிமையாளர் செல்ல விரும்புகிறாரோ?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கருத்தில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விலகுவதுபோல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தீர்களே?

அணி நிர்வாகத்தால் மீண்டும் ஏலம் எடுக்கப்பட மாட்டீர்கள் என்று சில நேரங்களில் நீங்கள் உணரும் தருணத்தை எதிர்கொள்வீரகள். அதற்கான சின்ன அறிகுறிகள் அணிக்குள் எழுவதைப் பார்ப்போம். என்னுடைய கண்ணோட்டத்தின்படி, சுவரில் எனக்கானது எழுதப்பட்டதை நான் பார்த்துவிட்டேன். ஆதலால் ரசிகர்களுக்கு நன்றி கூற சரியான நேரம் என நினைத்தேன், அந்தப் பதிவைத் தெரிவித்தேன்.

அடுத்தும் ஐபிஎல் ஏலத்தில் ஏதாவது அணிக்குத் தலைமை ஏற்க அழைத்தால் அதை விருப்பத்துடன் ஏற்பேன். என்னையும், என் விளையாட்டையும் மேலும் சிறப்பாக்கும். கப்டன் பதவி எப்படி என்பதையும் நான் அனுபவித்துவிட்டேன்.

சன்ரைசர்ஸ் அணியில் வில்லியம்ஸன், ஜேஸன் ஹோல்டர், ரஷித்கான் ஆகியோருடன் அதிகமாகப் பேசியிருக்கிறேன். கிரிக்கெட்டைப் பற்றி அதிகமாக என்னிடம் பல்வேறு தகவல்களைப் பகிரந்துள்ளார்கள். மீண்டும் கப்டனாகப் பதவி ஏற்றால் அது த்ரில்லாக இருக்கும். ஆனால், அணி வீரர்கள் எவ்வாறு அமைகிறார்கள் என்பதில் இருக்கிறது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாட விரும்புகிறேன். டெல்லி அணியில் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, கடைசியாக சன்ரைசர்ஸ் அணியில் முடிந்துவிடக் கூடாது. இன்னும் நீண்டகாலம் இந்த லீக் போட்டியில் விளையாட வேண்டும், ஏராளமான ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. தற்சமயத்தில் என்ன வாய்ப்பிருக்கிறதோ அதை எதிர்பார்த்திருக்கிறேன், 100 சதவீதம் பங்களிப்பு செய்வேன்” என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment