நியூசிலாந்தில் 6 வாரங்களில் இல்லாதளவு தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நியூஸிலந்தின் ஒக்லாந்து நகரில் 6 வாரத்தில் இல்லாதளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

அதனால் அங்கு முடக்கநிலை நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.

தற்போது, ஒக்லாந்தில் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் வீட்டில் தங்கும் உத்தரவின் கீழ் உள்ளனர். அங்கு டெல்ட்டா வகை வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஒக்லாந்தில் தொற்று  எண்ணிக்கை உயர்வது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அது இந்த அளவுக்கு அதிகரிக்கும் என்று நினைக்கவில்லை என நியூஸிலந்து துணைப் பிரதமர் கிரான்ட் ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட வீடுகளில் அதிகமானோர் கூடியதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

இந்நிலையில், ஒக்லாந்துவாசிகள், மூன்றாம் கட்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவசரத் தேவைகளுக்காக மட்டும் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறலாம் என்றார்.

ஒக்லாந்தில் 24 மணி நேர இடைவெளியில், புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதியானது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...

“வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” – நடிகை சிம்ரன் பகிர்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை...

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்