டியான்டே வைல்டரை தோற்கடித்து WBC ஹெவிவெயிட் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் டைசன் ப்யூரி.
நேற்று சனிக்கிழமை லாஸ் வேகாஸில் உள்ள டி-மொபைல் அரங்கில் நடந்த குத்துச் சண்டை போட்டியில், 11 வது சுற்றில் நொக் அவுட் மூலம் வைல்டரை வீழ்த்தினார் டைசன் ப்யூரி.
போட்டியின் பின்னர், “டியோன்டே வைல்டர் ஒரு சிறந்த போராளி. அவர் உண்மையான சவாலைக் கொடுத்தார். நான் எப்போதும் உலகில் சிறந்தவன், அவர் இரண்டாவது சிறந்தவர் என்று நான் எப்போதும் சொன்னேன்.” என டைசன் ப்யூரி தெரிவித்தார்.
போட்டியின் முதல் சில சுற்றுக்களில் வைல்டரின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.
முன்னதாக, இருவருக்குமிடையிலான குத்துச்சண்டை போட்டி உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்தது. இரண்டு வீரர்களும் மாறிமாறி வாய்ச்சவடால் விட, ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்தனர்.
11வது இறுதிச் சுற்றில் வைல்டரின் பக்கவாட்டு தலையில், டைசன் ப்யூரின் குத்து இடிபோல இறங்கியது. இதன்பின், வைல்டர் எழுந்திருக்கவில்லை.
அடிபட்ட வில்டர் சண்டை முடிந்த உடனேயே மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

முஹம்மது அலி மற்றும் ஜோ ஃப்ரேசியர் ஆகியோரை உள்ளடக்கிய காலத்தால் அழியாத போட்டிகளுடன், இந்த போட்டியும் ஒப்பிடப்படும் என விளையாட்டு விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டைசன் ப்யூரி குத்துச்சண்டை போட்டிகளில் தோல்வியடையாத சாதனை இப்போது 31-0 ஆக உள்ளது.
எனினும், இந்த போட்டியிலும் சில சர்ச்சைகள் உள்ளன. டைசன் ப்யூரியை, வைல்டர் வீழ்த்திய தருணங்களில், 10 வரை எண்ணப்பட்ட போது, அனுமதிக்கப்பட்டதை விட அதிக நேரம் ப்யூரிக்கு வழங்கப்பட்டது.
Scorecards. Your welcome. pic.twitter.com/v3LCMhDtab
— Carl Moretti (@CarlMoretti) October 10, 2021