24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

வீட்டுக்குள் நுழைந்து மனைவியுடன் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியின் கையடக்க தொலைபேசி, தலைக்கவசத்தை எடுத்துக் கொண்ட கணவன்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியென கூறிக்கொள்ளும் ஒருவர் தனது கள்ளக்காதலியின் வீட்டில், கள்ளக்காதலியின் கணவரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்திகளின்படி, பொலிசாரின் வெள்ளை தலைக்கவசம், மற்றும் பொலிஸ் அதிகாரியின் கைபேசி என்பவற்றையும் அந்த நபர் கைப்பற்றியுள்ளார்.

தான் இல்லாத நிலையில் தனது வீட்டுக்கு ஓஐசி வந்து தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக அவர் மொனராகலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரியின் கையடக்க தொலைபேசி மற்றும் தலைக்கவசம் ஆகியன இன்னும் அந்த நபரின் கைவசம் உள்ளது என்றும், விசாரணைகளில் அது வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மொனராகலை எஸ்பி சிசிர குமாரவின் உத்தரவின் பேரில் அவரது புகாரின் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அவரது முறைப்பாட்டின்படி, கடந்த 6 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பிய போது, ​​வீட்டின் ஒரு அறையில் பொலிஸ் அதிகாரி இருந்தார். உடனடியாக, மனைவியினதும், பொலிஸ் அதிகாரியினதும் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

வீட்டு முன் கதவை திறந்து கொண்டு பொலிஸ் அதிகாரி தப்பியோட, முறைப்பாட்டாளர் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது பொலிஸ் அதிகாரி தடுமாறி விழுந்துள்ளார். அப்போது கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில், விழுந்தவர் பொலிஸ் அதிகாரியென்பதை அறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மொனராகலை எஸ்பி சிசிர குமார உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

1ம் தர மாணவர் சேர்க்கை – இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

east tamil

மகிந்த 4.6 மில்லியன் வாடகை செலுத்த வேண்டும் – அனுர

east tamil

செல்வம் அடைக்கலநாதனுக்கு பிடியாணை: பின்னணி என்ன?

Pagetamil

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

Pagetamil

மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 57 வயதுடையவர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment