பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரி இல்லாத சலுகையின் கீழ் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, பயணிகள் தரையிறங்கிய அன்றைய தினமே அனுமதி வழங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
வரி இல்லாத சலுகையின் கீழ் பொருட்களை கொள்வனவு செய்யும் பகுதிக்குள் பயணிகள் நுழைவதற்கு முன், விமான நிலைய மருத்துவ அலுவலகம் தடுப்பூசி அட்டையை பரிசோதிக்கும். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர்களின் அட்டையில் சிவப்பு முத்திரை இடப்படும். இந்த முத்திரை பொறிக்கப்பட்டவர்களே, வரி இல்லாத சலுகையில் பொருட்களை கொள்வனவு செய்யும் பகுதிக்குள் நுழையலாம்.
விமான நிலையத்தில் தரையிறங்கிய அன்றைய நாளை தவிர, அடுத்தடுத்த நாட்களில் வரி இல்லாத சலுகையில் பொருட்களை வாங்கும் இடங்களிற்கு செல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.




