24.6 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 12 பேர் உட்பட 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: ஒருவர் மரணம்

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 12 பேர் உட்பட 15 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (04.10) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 15 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (03) ஒருவர் மரணமடைந்துள்ளார். தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த (வயது 59) ஆண் ஒருவரே மரணமடைந்தவராவார். மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment