இலங்கைக்க விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
இவர் நேற்று இலங்கைக்கு வருகை தந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை சுற்றி பார்வையிட்டார். அவருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் வருகை தந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1